எடப்பாடியுடன் இருப்பவர்கள் விரைவில் பாஜகவில் இணைவர்- புகழேந்தி
எடப்பாடியுடன் இருப்பவர்கள் விரையில் பாஜகவில் இணைவார்கள் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் அருகே தனியார் ஹோட்டலில் செய்தியாளர் சந்தித்த புகழேந்தி, “சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஆயிரம் கோடி ஊழலை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பாரா? கடந்த அதிமுக ஆட்சியின் போது சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் வாரியம் அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அப்போது பெய்த மழையால் சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளத்தை மூழ்கியது. அடுத்து அமைந்த திமுக ஆட்சியில் மீண்டும் மழை பெய்த போது சென்னை முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் வாரிய அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படாமல் தற்போது மழை நீர் சென்னை நகரம் முழுவதும் தேங்கியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
கோடநாடு கொலை குறித்து தேர்தல் நேரத்தில் மேடைக்கு மேடை உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி வந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமி ஏன் இன்னும் விசாரிக்கப்படவில்லை? லஞ்ச ஒழிப்புத் துறையால் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டும் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என்று மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவின் பொது செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் எண்ணம் ஈடேறாது. தங்கமணி திருந்த வேண்டும் இல்லையென்றால் களத்தில் இறங்க வேண்டி இருக்கும். அவர் வேண்டுமானால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதியில் எந்த ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.
அதிமுக பிரிந்து இருக்கும் நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் வந்தால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு சிரமம்.முன்னாள் முதல்வர் பழனிச்சாமியோடு இருப்பவர்கள் விரைவில் பாஜகயோடு இணைய உள்ளார்கள்” என தெரிவித்தார்.