×

ஈபிஎஸ்-க்கு எதிராக சூழ்ச்சி நடந்துள்ளது- ஆர்பி உதயகுமார்

 

தேவரின் தங்க கவச விவகாரத்தில் தங்கள்  தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை காந்தி மியூசியம் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவுக்கு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சச்சின் சிவாவுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும், பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தென் தமிழகத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மரியாதை செய்து உள்ளார், 2017 ல் தேவரின் தங்க கவசம் எடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மதி நுட்பத்தோடு செயல்பட்டார், தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார். சலசலப்பு, சச்சரவுக்கு எதிராக எடப்பாடியார் அஞ்ச மாட்டார். 

ஓ.பி.எஸின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது மக்களுக்கு தெரியும், அதிமுக தேனி மாவட்டத்தில் 1 தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதுவே ஓ.பி.எஸின் செல்வாக்கு. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி ஒன்றரை இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது, ஓ.பி.எஸ் எந்தவொரு தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. ஓ.பி.எஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் யுக்திகள் தோல்வியில் முடியும். 50 ஆண்டுகளில் அதிமுக தோல்வியையும், வெற்றியையும் சந்தித்துள்ளது,  எதுவும் நிரந்தரமில்லை.வீழ்வதும், வெல்வதும் தொண்டர்கள், மக்கள் கையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக புதிய வரலாறு படைக்கும்" எனக் கூறினார்.