×

சொத்தை தருகிறேன்; பண்ணைத் தோட்டத்தை தருகிறேன் என ஓபிஎஸ் வலைவீசுகிறார்- ஆர்பி உதயகுமார்

 

பல்வேறு வலைகளை வீசி அதிமுக நிர்வாகிகளை தன் வசப்படுத்த முயலும்  ஓபிஎஸ் -ன் செயல் அனைத்தும் பயனில்லை,  எலிவலை, கொசுவலை போன்று எந்த வலை போட்டாலும்,  அவருக்கு தோல்விதான் என எடப்பாடி ஆதரவாளர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பு குறித்து , அதிமுக நிர்வாகிகளிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஏற்று பேசிய திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும்,  முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், “ஓபிஎஸ் , எடப்பாடி ஆதரவாளர்களிடம் என் சொத்து முழுவதையும் தருகிறேன்,  தன் பண்ணைத் தோட்டத்தையும் தருகிறேன், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் தருகிறேன் என வலைவீசி ஆட்களை சேர்க்க முயற்சித்து வருவது தோல்வியை தழுவுவோமே தவிர ஏமாற்றமே மிஞ்சும்.

எலிவலை, கொசுவலை போன்று எந்த வலை போட்டாலும் ஓபிஎஸ்க்கு பயனில்லை. மேலும் மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி,  எடப்பாடி பழனிச்சாமியிடம் மட்டுமே நலம் விசாரித்தார். ஓ .பன்னீர் செல்வத்தை கண்டு கொள்ளவில்லை, இதன் மூலம் பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பது தெரிய வருகிறது” எனக் கூறினார்.