×

சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்த தலைவர்களுடன் இத்தாலியின் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்துள்ளது... ரகுபர் தாஸ்
 

 

சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்த தலைவர்களுடன் இத்தாலியின் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்துள்ளது என பா.ஜ.க.வின் ரகுபர் தாஸ் தெரிவித்தார்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுபோத் காந்த் சஹாய்  பேசுகையில், ஹிட்லரின் அனைத்து வரலாற்றையும் அவர் (மோடி) கடந்த விட்டதாக உணர்கிறேன். ஹிட்லர் வழியில் மோடி நடந்தால் ஹிட்லரின் மரணம்தான் மிஞ்சும். காங்கிரஸ் தியாகிகளின் கட்சி. காங்கிரஸ் கட்சியில் தியாகிகளின் நீண்ட பட்டியல் உள்ளது என தெரிவித்தார்.


ஹிட்லர் வழியில் மோடி நடந்தால் ஹிட்லரின் மரணம்தான் மிஞ்சும் என்ற காங்கி்ரஸ் தலைவரின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் இது தொடர்பாக கூறியதாவது: 135 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி அனுபவித்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்த தலைவர்களுடன் இத்தாலியின் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்துள்ளது. 50 ஆண்டுகளில் கொள்ளையடித்தார்கள், இன்று ஆடிட்டிங் நடக்கிறது. 

அதனால் அவர்கள் பொதுவெளிக்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இது போன்ற அறிக்கைகளால் காங்கிரஸ் முடிவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம், சுபோத் காந்த் சஹாய்க்கு காங்கிரஸ் கட்சியின் ஹரிஷ் ராவத் ஆதரவாக பேசியுள்ளார். சுபோத் காந்த் சஹாய் உண்மையைதான் பேசுகிறார் என ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.