காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டங்களை புறக்கணித்த ராகுல் காந்தி.. மீண்டும் வெளிநாடு பயணம்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டங்களை புறக்கணித்து விட்டு, தனிப்பட்ட காரணங்களுக்குாக ராகுல் காந்தி நேற்று வெளிநாடு கிளம்பி சென்றார்.
பாரத் ஜோடோ பயணம் மற்றும் காங்கிரஸின் உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் வியாழக்கிழமை காங்கிரஸ் முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி தலைமை விடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தி நேற்று தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றார். காங்கிரஸின் முக்கிய கூட்டங்களை புறக்கணித்து விட்டு ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்புவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வதை பா.ஜ.க. விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு ராகுல் காந்தி இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது, இதனால் அவர் குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.