×

மகாத்மா காந்தியையும், என்னையும் ஒப்பிடுவது முற்றிலும் தவறு... ராகுல் காந்தி 

 

மகாத்மா காந்தியையும் என்னையும் ஒப்பிடுவது முற்றிலும் தவறு என்று காங்கிரஸாரிடம் ராகுல் காந்தி கண்டிப்புடன் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. நடைப்பயணத்தின்போது ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  ராகுல் காந்தி கூறியதாவது: மகாத்மா காந்தியையும், என்னையும் ஒப்பிடுவது முற்றிலும் தவறு. நாங்கள் ஒரே லீக்கில் இல்லை, எந்த ஒப்பீடும் இருக்கக் கூடாது. அவர் ஒரு பெரிய மனிதர். நாட்டின் சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். 10 முதல் 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் பெயருடன் என் பெயரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. 

ராஜீவ் காந்தியும், இந்திரா காந்தியும் என்ன செய்தார்களோ, நன்றாக செய்தார்கள், அவர்கள் தியாகிகள் ஆனார்கள். ஆனால் ஒவ்வொரு கூட்டத்திலும் காங்கிரஸ் அதை பற்றியே பேசக் கூடாது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி என அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதை பற்றி சிந்திப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சஞ்சய் ஜா கூறுகையில், முதலாவது, இது ராகுல் காந்தியின் அரசியல் பிராண்ட்டுக்கு புத்துயிர் பெற்றுள்ளது. பா.ஜ.க.வின் தங்களின் போலி செய்திகளை தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை பயன்படுத்தி அவரை கேலி செய்ய முடியாது.  இரண்டாவதாக, வெகுஜன இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் இறுதியாக மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளது என தெரிவித்தார்.