×

தேசியவாத காங்கிரஸின் ஹசன் முஷ்ரிப் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அழுத்த அரசியல் என சஞ்சய் ரவுத் சாடல்

 

மகாராஷ்டிராவில் சர்க்கரை ஊழல் தொடார்பாக தேசியவாத காங்கிரஸின் ஹசன் முஷ்ரிப் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை அழுத்த அரசியல் என்று சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.

சர்க்கரை ஆலை ஊழல் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹசன் முஷ்ரிப்பின் கோலாப்பூரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தியது. இதனை அழுத்த அரசியல் என்று சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். உத்தவ் பாலசாகேப் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறியதாவது: இந்த நடவடிக்கை அழுத்தம் அரசியல் ஆனால் முஷ்ரிப் இந்த கட்டத்தில் இருந்து வெளியே வருவார். 

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் எதிர்க்கட்சி தலைவர் முஷ்ரிப். நானாகட்டும், அனில் தேஷ்முக் அல்லது நவாப் மாலிக் ஆகியோர் தனித்தனி வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்கள். பா.ஜ.க.வின் சில தலைவர்கள் ஹசன் முஷ்ரிப்பை சிறையில் அடைப்பது பற்றி பேசினர். அதேபோல், எம்.பி. பாவனா கவ்லி மற்றும் யஷ்வந்த் ஜாதவ் (ஏக்நாத் ஷிண்டை சிவ சேனா பிரிவை சேர்ந்தவர்கள்) குறித்து இதே போல் பேசப்பட்டது. 

இப்போது அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள். ஆகையால் அவர்கள் நிவாரணம் பெறுகிறார்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அழுத்த அரசியலை எதிர்க்கொள்கிறார்கள். முஷ்ரிப் ஒரு போராளி, முழு எதிர்க்கட்சியும் அவருடன் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.