×

சசிகலா, தினகரன் இணைப்பு - சையது கான் பரபரப்பு

 

 சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் இணைக்க வேண்டும் என்று  தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுக்க,  தொண்டர்களின் விருப்பத்தை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான்.

 தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.  இந்த கூட்டத்தில் அதிமுகவின் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது.   அப்போது அதிமுக  கட்சி இரண்டாக பிரிந்து நிற்பதால் தான் வாக்குகள் சிதறுகின்றன. அதனால்தான் படுதோல்வி.  நமக்கு  இனியும் இந்த தோல்வி வரக்கூடாது.  இணைந்து நின்றால் நாம் தான் எப்போதும் ஜெயிப்போம் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.

 அந்தக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் எந்தவித நிபந்தனையும் இன்றி மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

 இதுகுறித்து தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், ’’ உள்ளாட்சித் தேர்தல் தோல்வி குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டோம்.  அப்போது,  நாம் பிரிந்து இருந்ததால் தான் அதிமுக தோற்றதற்கு காரணம் என்று எல்லோருமே சொன்னார்கள் .   அந்த தவறு மீண்டும் நடக்கக்கூடாது என்றும் எல்லோரும் வலியுறுத்தினார்கள்.   அதனால் நமது கட்சி ஒன்றாக இணைய வேண்டும்.

  அதிமுக என்ற கட்சி ஒரே கட்சியாக இருந்தால் தான் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி நமக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார்கள்.   இதையடுத்து அனைவரும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம் .  தேனி மாவட்டத்தில் இது ஆரம்பம் தான் தமிழகம் முழுவதும் இது தரும் தொடரும் என்றார்.

மேலும், அந்த தீர்மானத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் கொடுத்தோம்.   அவர் எங்களின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உறுதியளித்திரு.  நல்ல முடிவு எடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்க்கிறார் என்று கூறியுள்ளார்.