’’போதும் போதும் தோற்றது போதும்! தலைமை ஏற்க வா தாயே!’’
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. பல இடங்களில் டெபாசிட்டை இழந்திருக்கிறது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர் ஒரு ஓட்டை மட்டுமே பெற்றிருக்கிறார் . அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலைமையை நினைத்து அக்கட்சியினரே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவுக்கு தலைமை மாற்றம் தேவை. சசிகலா அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்று சென்னை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர் .
மதுரையிலும் அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முனிஸ் சென்ற அதிமுக தொண்டர் இந்த போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்.
அந்த போஸ்டரில், தோற்றது போதும்... எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை தோல்வியில் இருந்து மீட்க தலைமை ஏற்க வாருங்கள் தாயே என்ற வாசகங்கள் உள்ளன. இந்த போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவிற்கு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சசிகலா வேறு ,50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை எண்ணி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்த நாளில் உறுதி ஏற்போம் .விதைத்தவர்கள் வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை. இதை அவர்கள் உணர வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார் .