×

அதிமுக விஷயத்தில் எப்போது? என்ன? செய்ய வேண்டுமென எனக்கு தெரியும்- சசிகலா

 

அதிமுக பொன் விழாவையொட்டி சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவு மண்டபத்திலும் அவரது தாய் சத்தியபாமா நினைவு மண்டபத்திலும் ஜானகி எம்ஜிஆர் நினைவு மண்டபத்திலும் சசிகலா மரியாதை செலுத்தினார். ராமாபுரம் தோட்டத்திற்கு வந்த சசிகலாவிற்கு, எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

அதன்பின் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு சசிகலா மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “அதிமுக விஷயத்தில் எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும், தொண்டர்கள் மட்டும் துணையாக இருக்க வேண்டும்” என்றார்.


அதிமுகவின் 51வது ஆண்டு விழாவை  எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் மூன்று அணிகளாக பிரிந்து நிர்வாகிகள் கொண்டாடிய நிலையில், அதிமுக ஆண்டு பலரும் வெளியிடப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.