×

ரகசிய சந்திப்பு - சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து கிடைத்த சிக்னல்

 

 ஓ .பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் தனக்கு கிரீன் சிக்னல் கொடுத்து வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து ரெட் சிக்னல்  போட்டுக் கொண்டே இருப்பதால் அப்செட்டில் இருந்த சசிகலா,  அதிமுகவிற்குள் அதிரடியாக நுழைய வேண்டும் என்றால் பாஜகவின் தயவு தேவை என்பதை உணர்ந்து இருக்கிறார். 

 அதனால் தான் அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தார்.   நடிகர் ரஜினிகாந்த் மூலமாக எப்படியாவது பாஜக தலைமையை சந்தித்து விடலாம் என்று நினைத்து ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகின.  ஆனால் அந்த சந்திப்பில்,   என்னால் அரசியலுக்கு பாஜக தலைமையிடம் எதுவும் பேச முடியாது என்று எடுத்து எடுப்பிலேயே ரஜினி சொன்னதாகவும்,  அதன் பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன் சொன்னதாகவும் தகவல் வெளியானது. 

 அதேபோல் நடிகையும் அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் விஜயசாந்தி  சசிகலாவை சந்தித்து பேசினார்.  ஜெயலலிதா இருந்தபோது ஜெயலலிதாவையும் சசிகலாவையும் அடிக்கடி சந்தித்தவர் விஜயசாந்தி.   அந்த வகையில் சசிகலாவை சந்தித்தபோது அமித்ஷாவை சந்தித்து பேச வேண்டும்.  அதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சசிகலா.

 தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு போன விஜயசாந்தி,  எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என்று சொல்லி சசிகலாவை படு அப்செட்டில் தள்ளியிருக்கிறார் விஜயசாந்தி.

இதன்பின்னர்தான் ஆன்மீக பயணத்தை கையில் எடுத்துச்செல்லும் சசிகலாவை  கடந்த வாரத்தில் மீண்டும் சந்தித்திருக்கிறார் விஜயசாந்தி.  இந்த சந்திப்பு ரகசியமாக நடந்திருக்கிறது. அப்போது சசிகலாவுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் பல டெல்லி தகவல்களை சொல்லியிருக்கிறார் .  அந்த அடிப்படையில் சசிகலா விரைவில் டெல்லிக்கு செல்ல இருப்பதாகவும் , அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாகவும் தகவல்.