×

பொன்னையனை அடுத்து செம்மலை ஆடியோ!  எடப்பாடிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

 

பொன்னையன் பேசிய ஒரு ஆடியோவே எடப்பாடி அணியில் பெரும் புயலை வீசி இருக்கிறது.   அதன் பின்னர் பொன்னையன் ஓபிஎஸ் இடம் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.   அந்த ஆடியோவில் நாஞ்சில் கோலப்பன் போல முழு ஆடியோவை உடனே வெளியிடாமல் அந்த ஆடியோவில் இருக்கும் விஷயத்தை அவர் தெரிவித்திருந்தார் . 

எடப்பாடி அடங்க மாட்டார் போலிருக்கிறது.  அதனால் உடனே கோர்ட்டில் போய் ஸ்டே வாங்குங்க ஓபிஎஸ் என்று பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்க ஓபிஎஸ்க்கு ஆலோசனை  வழங்கி இருந்தது குறித்து அவர் தெரிவித்து இருந்தார்.  பொன்னையன் போல மேலும் பல தலைவர்கள் எடப்பாடியால் அதிருப்தி அடைந்து எடப்பாடி அணியின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் கொதித்து எழுந்திருந்தும் ஆடியோக்கள் அடுத்து ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் அவர் சொல்லி இருந்தார் .

இந்த நிலையில் பொன்னையனிடம் பேசிய ஆடியோவை வெளியிட்ட கன்னியாகுமரி முன்னாள் அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் தற்போது செம்மலையிடம் பேசிய ஆடியோவை வெளியிடாமல் அந்த ஆடியோவில் இருக்கும் விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

 பொதுக்குழு என்ற வயதில் ஜூன் 23ஆம் தேதி கூட்டப்பட்ட கூட்டத்திற்கு முன்னதாக கட்சியின் பல்வேறு நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோக்கள் என் வசம் இருக்கின்றன.   அதில் பல நிர்வாகிகள் மனம் வெதும்பி கொதித்தெழுந்து பேசி இருக்கிறார்கள்.  அதில் ஒரு மூத்த அதிமுக நிர்வாகி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.  எம். பி ஆக்குகிறேன் என்றார்கள்.  ஆனால் எம்பி எம்எல்ஏ சீட் கூட தரவில்லை.  மாவட்டச் செயலாளர் பதவியும் கூட தரவில்லை என்று செம்மலை மிகவும் என்னிடம் மனம் வருந்தி பேசினார் என்று சொல்கிறார்.

 ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனால்  அதிர்ச்சி மேல்  அதிர்ச்சியால் ஆட்டம் கண்டு இருக்கிறார் எடப்பாடி.