×

மீண்டும் ரபேல் வாட்ச் விவகாரத்தை கையில் எடுத்த செந்தில் பாலாஜி 

 

அன்பளிப்பாக கொடுத்தார்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே  என்று மீண்டும்வாகரத்தை கையில் எடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

 அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் 5 லட்சம் ரூபாய் என்றும் அதற்கு பில் இருக்குதா என்றும் கேட்டிருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  இதற்கு அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் ,  அண்ணாமலைய 5 லட்சம் ரூபாயில் வாட்ச் கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் அரசு கட்சியின் மாநில தலைவராகத் தான் இருக்கிறார்.  கமிஷனராகவோ,  எம்எல்ஏவாகவும் , எம்பி ஆகவோ இல்லை. ஆனால் முதல்வரும் உதயநிதி ஸ்டாலினும் அவரது மருமகன் சபரீசனும்  பல கோடி ரூபாய் மதிப்பிலான வாட்ச் களை கட்டி இருக்கிறார்கள்.  

 5 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரையிலான வாட்சுகள் கட்டியிருக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்து வந்தனர்.   ரபேல் வாட்ச்க்கான பில் கேட்டதால் ஏப்ரல் மாதம் பாதயாத்திரை தொடங்கும் போது ரபேல் வாட்ச்க் காண பில் மட்டுமல்ல என் சொத்து விவரத்தையும் மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்  என்று கூறியிருந்தார் அண்ணாமலை.

 அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி,  எதற்கு இப்படி சுற்றி வளைக்க வேண்டும் பில் இருக்குதா இல்லையா இருந்தால் கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டிருந்தார் .  பின்னர் அவரே கர்நாடகாவில் ஒரு காபி நிறுவனத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்த போது அன்பளிப்பாக கொடுத்தது என்று கூறியிருந்தார். இடையில் சில நாட்கள் இந்த ரபேல் வாட்ச் விவகாரம் ஓய்ந்திருந்தது.

 இந்நிலையில் மீண்டும் அந்த வாட்ச் ஆதாரத்தை கையில் எடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.   சென்னையில் கலைஞர் அரங்கத்தில் நடந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளின் இரண்டாம் நாள் நேர  நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி பேசிய போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறோம் என்பதை மட்டும் பொருத்திருந்து பாருங்கள். மக்கள் முதலமைச்சர் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்றார்.

 அடுத்து அவர் அண்ணாமலையின் தமிழ் வளர்ச்சி விவகாரத்திற்கு தாவினர் ஏப்ரல் விவாதம் பற்றுக்கான பில் தருகிறேன் அண்ணாமலை பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே.  இல்லை என்றால் வெகுமதியால் வந்தது.  அன்பளிப்பாக கொடுத்தார்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.