×

பாதுகாப்பு குறைப்பு.. இது பா.ஜ.க.விடம் இருந்து எதிர்பார்த்ததுதான்.. சிவ்பால் யாதவ் 
 

 

தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை உத்தர பிரதேச அரசு குறைத்ததை, இது பா.ஜ.க.விடம் இருந்து எதிர்பார்த்ததுதான் என்று சிவ்பால் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான சிவ்பால் யாதவ், மெயின்புரி நாடாளுமன்ற  தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிடும் டிம்பிள் யாதவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்துக்கு நடுவே செய்தியாளர்களை சிவ்பால் யாதவ் சந்தித்து பேசினார். அப்போது, அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை பா.ஜ.க. அரசு குறைத்தது உள்ளிட்ட செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிவ்பால் யாதவ் பதிலளிக்கையில் கூறியதாவது: இது பா.ஜ.க.விடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. இப்போது மக்களும். கட்சியினரும் எனக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.

டிம்பிள் யாதவின் வெற்றி வித்தியாசம் இப்போது மேலும் அதிகரிக்கும், பா.ஜ.க.வின் தோல்வி வித்தியாசமும் அதிகரிக்கும். கால்பந்தை பொறுத்தவரை, ஒரு நல்ல வீரருக்கு எப்படி கோல் போடுவது என்பது தெரியும். இப்போது டிம்பிள் ஒரு கோல் போடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், சிவ்பால் யாதவின் நிலை ஊசல் போல் ஆகிவிட்டது. அது எந்த மரியாதையும் இல்லாதது, வாழ்க்கையில் ஒருவர் அப்படி ஆகிவிடக் கூடாது. ஒருவர் கால்பந்து போல் நகரும் போது. ஒருவர் இந்த பக்கத்திலிருந்து மற்றவர் அந்த பக்கத்திலிருந்து உதைக்கிறார். சிலர் கால்பந்தாக மாறிவிட்டார்கள். கால்பந்தாட்டமாக மாறாமல் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று சிவ்பால் யாதவை மறைமுகமாக கூறினார்.

யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு அகிலேஷ் யாதவ் பதில் அளித்தார். அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், சிவ்பால் யாதவின் பாதுகாப்பை குறைப்பது ஆட்சேபனைக்குரியது. மேலும் ஒரு ஊசல் என்பது காலத்தின் இயக்கத்தின் சின்னம் மற்றும் அனைவருக்கும் காலத்தின் மாற்றத்தை குறிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் பெருமைப்படக்கூடிய நிலையானது எதுவுமில்லை என பதிவு செய்து இருந்தார்.