×

"விரைவில் மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும்"  - சேலத்தில் ஈபிஎஸ் பேட்டி!!

 

மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

சேலம் மாவட்டம் மெய்யனூரில் அம்மா இலவச தையல் பயிற்சி மையத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . திமுக தேர்தல் சமயத்தில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய்யாக தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா  போன்ற சோதனையான காலகட்டத்தில் கூட மக்களுக்கு வாழ்வளிக்க கூடிய எந்த ஒரு திட்டமும் இதில் இடம்பெறவில்லை.  சேலத்தில் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 100% வருகை உயர்த்தியுள்ளனர்.  இது மிகப்பெரிய சுமையை மக்கள் தலையில் சுமத்தியது போல் உள்ளது.  சொத்து வரி உயர்வு என்பது வேதனை அளிக்கிறது.  உண்மையாகவே இது மக்களுக்கு செய்யப்படுகின்ற மிகப்பெரிய துரோகம்.  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் யாரும் தொழிற்சாலைகளை கொண்டுவரமுடியாது.  முதல்வர் ஸ்டாலின் நினைத்தாலே கூட கொண்டு வர முடியாது.  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டதன் நோக்கமே விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டமும்,  தொழிற்சாலையும் டெல்டா மாவட்டத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான்.  இதன் மூலம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பை  ஏற்படுத்திய  அரசு அதிமுக அரசு .பாமர மக்களையும் திமுகஏமாற்றிவிட்டது,  படித்த  மக்களையும் ஏமாற்றி விட்டது.  ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு;  ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று இரட்டை வேடம் போடுகிறார்கள்.

சொத்துவரி உயர்த்தியுள்ளது ஆரம்பம்தான்.  அடுத்தடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தி ஆக வேண்டும் . வேறு வழி கிடையாது.  நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த திட்டத்தையும் கொண்டு வந்ததாக தெரியவில்லை.  நிதிப்பற்றாக்குறை வரும்போது அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தும், பால் விலையை உயர்த்தும். மின் கட்டணமும் உயர்த்தப்படும். அரசு பேருந்துகளில் போதிய பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதை ஓட்டுநர்களே தெரியப்படுத்தி வருகிறார்கள்.  அதிமுக ஆட்சியில் வாங்கிய 14,000 பேருந்துகளை இப்போது ஓட்டுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.