சுகேஷின் மாறுபட்ட வாக்குமூலம்! டிடிவி தினகரனிடம் 11 மணி நேர விசாரணை
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் பதினோரு மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர் அமலாக்கத் துறையினர். சுகேஷ் சந்திரசேகர் அளித்த மாறுபட்ட வாக்குமூலத்தின் காரணமாக தினகரனிடம் இந்த விசாரணை நடந்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் சசிகலா உறவினரான தினகரனும், ஓபிஎஸ் தலைமையிலான எதிரணியும் போட்டியிட்டன. இப்போட்டியில் இரட்டை இலை சின்னம் கேட்டு இருவரும் உரிமை கோரினார்கள். இதனால் குழப்பம் ஏற்பட்டது . இதையடுத்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது .
இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் வாயிலாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச் சாட்டு எழுந்தது. டிடிவி தினகரனும், 50 கோடி ரூபாய் பேரம் பேசி உதவியதாக அவரது உறவினர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டனர்.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது . இவ்வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பண மோசடி தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு குறித்து சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். இதேபோல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் முன்பணமாக 2 கோடி ரூபாய் கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறையினர் டிடிவி தினகரன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர் .டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று தினகரன் ஆஜரானா. ர் அவரிடம் தொடர்ந்து 11 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர் அமலாக்கத் துறையினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகரின் மாறுபட்ட வாக்குமூலத்தின் காரணமாக விசாரணை அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தினர். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராவேன் என்றும், இந்த வழக்கில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.