×

அமமுகவால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை - டிடிவி தினகரன்

 

ஆர்கேநகர் இடைத் தேர்தலுக்கு பின் எந்த தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற முடியவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


சிவகாசியில் விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலுக்குப் பின் எந்த தேர்தலிலும் நாம் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் தொடர்ந்து மக்களிடையேஎதையும் எதிர்பார்க்காமல் எடுத்துச்செல்லும் இயக்கம் அமமுக.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடிபழனிச்சாமி ஆட்சி வியாபார நோக்கத்துடன்  செயல்பட்டு ஊழல் காரணமாக தீய சக்தி போய் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாரு என்று ஆட்சிக்கு வந்த பின்பாக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கூடவே மின்தடையும் வந்துவிடும். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர தமிழ்நாடு முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் வலம் வருவேன். ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரும் வரை ஓயமாட்டோம். இழந்த இயக்கத்தை ஜனநாயக முறையில் மீட்டெடுப்போம். நாசகார சக்திகள் எங்களைப் பார்த்து தீயசக்தி என்கிறது. அந்த துரோக சக்தியை வென்று நிச்சயம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்.