×


அதிமுக கட்சி அல்ல கம்பெனி - டிடிவி தினகரன் 

 

மடியால் கணம் இருப்பதால் எதிர்கட்சியாக அதிமுக செயல்படவில்லை அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாகையில் சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க டிடிவி தினகரன் இன்று நாகை சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் கூறுகையில், “அதிமுக ஒரு கட்சியாக நடக்கவில்லை கம்பெனியாக நடக்கிறது. வியாபார கம்பெனியான அதிமுகவில், அதிக முதலீடு செய்தவர்களுக்குதான் பொறுப்பு. பாஜக எதிர்கட்சி கிடையாது, ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கட்சிதான், மடியில் கணம் இருப்பதால், ஒரு எதிர்கட்சியாக அதிமுக முறையாக செயல்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.