×

வளர்ப்பு மகன் வாரிசு அரசியலைப் பற்றி பேசுவது நகைச்சுவை -கொளுத்திப்போட்ட காயத்ரி ரகுராம் - பற்றி எரியும் அண்ணாமலை ஆதரவாளர்கள்

 

வேலையும் புகழும் கர்நாடகாவில் மட்டுமே. ஒருவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் எம்எல்ஏ சீட்டு, கட்சியில் சேர்ந்தவுடன் மாநில துணைத்தலைவர், கட்சியில் சேர்ந்தவுடன் சீட் பங்கீடு/கூட்டணி என்று பேச பதவி கொடுக்கப்பட்ட தத்தெடுக்கப்பட்ட மகன் மட்டுமே இவ்வளவு சுயநலவாதியாக இருக்க முடியும்.   தமிழ்நாட்டில் எந்த அனுபவமும் இல்லை, தமிழ்நாட்டின் மீது அன்பும் இல்லை, தமிழன் என்ற பெருமையும் இல்லை. இந்த பெருமைக்குரிய கனடிகாவிற்கு. அவர் வளர்ப்பு மகன் என்பதால் எல்லாம் எளிதாக இருந்தது என்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

அவர் மேலும்,  நான் நீதிக்காக குரல் கொடுத்தது. அனைத்து பெண்களுக்கும் பாதிக்கப்பட்ட தலைவர்களுக்கும் நீதி. ஏனெனில் இது இப்போது வளர்ப்பு மகன் வாரிசு அரசியலைப் பற்றி பேசுகிறார். அது நகைச்சுவை.வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்கிறோம். எந்த உழைப்பும் இல்லாமல் நேரடியா தலைவர் எப்படி? வளர்ப்பு மகன் அரசியலும் வாரிசு அரசியல் தான். ஒருவரைக் காப்பாற்ற, அனைவரும் ஹனிட்ராப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.  அனுபவம் இல்லாததால் சாவடியில் மற்றும் களத்தில் எந்த பலத்தையும் காட்டவில்லை ஆனால் மண்டல தலைவர் மற்றும் மாவட்ட தலைவராக அனைவரையும் “உன்னை பதவியை விட்டு தூக்கிடுவேன்”  மிரட்டல் விடு..என்று தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் காவல் துறை உயர் பதவியில் இருந்தவர் அண்ணாமலை.  அவர் அப்பதவியை உதறிவிட்டு தமிழகத்திற்கு வந்து தமிழக பாஜகவில் இணைந்து குறுகிய காலத்திலேயே அந்த கட்சியின் மாநில தலைவராக உயர்ந்திருக்கிறார்.  இதனால் அக்கட்சியில் உள்ள சீனியர்கள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்ற சலசலப்பு கட்சிக்குள் நிலவி வருகிறது.  

 குறிப்பாக கட்சியில் இருந்த காயத்ரி ரகுராமுக்கும் அண்ணாமலைக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது.   இந்த நிலையில் காயத்ரி ரகுராமுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளை பறித்தார் அண்ணாமலை.  இதனால் ஆத்திரத்தில் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.   திமுகவுடன் தொடர்பிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறார்,  கட்டப்பஞ்சாயத்து கூட நடத்துகிறார் என்று அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் பதிலுக்கு காயத்ரி ரகுராம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் அண்ணாமலையை காயத்ரிரகுராம் இவ்வாறு டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.  இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் .  திமுகவின் வாரிசு அரசியலைப் பற்றி அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்,  பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் திமுகவின் வாரிசு அரசியலை ஆதரித்து,  அதே நேரம் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளது குறித்தும் அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் .

 வளர்ப்பு மகன் யார் என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும் ,  அவர் அண்ணாமலையை தான் அப்படி சொல்கிறார் என்று எடுத்துக்கொண்டு அவரது ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

சிலவற்றிற்கு முன் அனுபவம் தேவையில்லை. அது உங்களுக்கே தெரியும் போக போக பழகிவிடும். ஆனால் அண்ணாமலைக்கு பத்து வருடம் மக்களோடு மக்களாக பணிபுரிந்து அனுபவம் இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறமை இருக்கிறது. இதையெல்லாம் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.  வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னபின் ஏன் காத்திருக்க வேண்டும்.  அறிவாலயத்தின் கதவுகள் தட்டக் கூட வேண்டாம்.  அகலத் திறந்தே இருக்கிறது.  அங்கே செல்லுங்கள் நாளையே உங்களுக்கு கொபசெ பதவி தருவார்கள்.   நீங்கள் பாஜக வில் அவர்களுக்காக இத்தனை நாள் அயராது உழைத்ததற்கு என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.