×

மீம்ஸ் தயாரிப்பாளர்களின் கவலையைப்போக்க மீண்டும் வந்துவிட்டார் தமிழிசை..

 


அவர் எக்குபுக்காகப் பேட்டி கொடுப்பார்.  அவரைக் கிண்டல் அடிப்பதற்காக வடிவேலு, கவுண்டமணி காமெடி காட்சிகளின் கிளிப்பிங்குகளுடன் மீம்ஸ்  தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சித்திருக்கிறது முரசொலி நாளிதழ்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.   புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.   இவரை முரசொலி நாளிதழில் கடுமையாக விமர்சித்திருக்கிறது.   ’’எல்லை தாண்டி தமிழகத்திற்குள் மூக்கை நுழைக்க பார்க்கிறார் தமிழிசை .  சமயம் கிடைக்கும் போது வாலை நீட்டி ஆழம் பார்த்திடவும் முயற்சிக்கிறார்.   தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி இவரது எல்லைக்குள் வரம்பு மீறி செயல்படுகிறார் என்றால் தமிழிசை எல்லை தாண்டி வரம்பு மீறுவதும் வாலை நீட்டுவதும் ரவிக்கு கூட கோபத்தை உருவாக்கக்கூடும்’’ என்கிறது முரசொலி நாளிதழ்.

 அந்த கண்டன கட்டுரையில் மேலும்,  ’’தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோது இப்படி ஏதாவது எக்கு புக்காக பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் மீம்ஸ் தயாரிப்பாளர்கள் எல்லாம் அவரை கிண்டல் அடிப்பதற்காக வடிவேலு,   கவுண்டமணி  காமெடி காட்சிகளின் கிளிப்பிங்குகளுடன் காத்திருப்பார்கள்.

தமிழிசையின் பேட்டி வந்ததும் சகட்டுமேனிக்கு அவரை கலாய்த்து பீம்ஸ்கள்  வரும்.   தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்த போது கட்சியில் இருந்த பலரும் தமிழிசைக்கு ஆளூநர்பதவி கிடைத்துள்ளது என்று மகிழ,  பல மீம்ஸ் தயாரிப்பாளர்களும் சந்தோஷப்பட்டாலும் கூட தங்களுக்கு இனி பெரிய அளவில் தகவல் கிடைக்காமல் போய்விட்டது என்று உள்ளுக்குள் வருந்தியவர்கள் உண்டு.   அவர்களது அந்தக் கவலையை தீர்க்க தமிழிசை  மீண்டும் தமிழக அரசியலுக்குள் நுழைந்து தனது அரசியல் அரைகுறைத்தனத்தை காட்ட தொடங்கி இருக்கிறார்’’என்கிறது.

மேலும், ’’புதுச்சேரியில் தங்களது பாஜக கூட்டணி அரசு நடைபெறுகிறது என்பதை மறந்து புதுவை மாநில அரசின் முதலமைச்சரை ஓரங்கட்டி இன்று முதலமைச்சர் அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறார்களா அல்லது கவர்னர் ஆட்சி நடைபெறுகிறதா என்று மக்கள் எல்லாரும் சந்தேகம் கொள்ளும் வகையில் எல்லை மீறிய செயல்களை செய்து வரும் ஆளுநர் தமிழிசை செய்யும் செயல்களால் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள் என்கிற செய்திகள் கிசுகிசுக்களாக வெளி வருகின்றன.  நெருப்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால் புகைச்சல் கிளம்பி இருக்கிறது .

புதுவைவயில் தமிழிசையை ஆட்சி செய்ய விட்டு விட்டு முதலமைச்சரும் மற்ற மற்ற அமைச்சர்களும் டம்மி பீஸ்களாக இருப்பதாக புதுவை மாநில மக்களே பேசிவிடும் அளவு நிலைமை அங்கு மோசமாகி வருகிறது.  இவை சீர் செய்திடாது அந்த மாநிலத்தை அரசியலை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குள் நுழைந்து எல்லை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும்.   இப்போது தமிழிசையின் அரைகுறை அரசியலில் அறிவில் எழுந்த கேள்வியை பார்ப்போம்... தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளை திறப்பதை தடுப்பது ஏன்?  நவோதயா பள்ளிகளில் எங்கே இந்தி திணிப்பு? என்று கேட்டிருக்கிறார்.

 தமிழிசை இப்படி இந்தி இசையாக மாறி நவோதயா பள்ளிகளுக்கு நடையா வாடை விரிக்கும் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்.   தமிழிசையின் கூற்று ஏற்புடையதுதானா நவோதயா பள்ளிகளில் எங்கே இந்தி திணிப்பு இருக்கிறது என்கிற ஒரு அறிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார் தமிழிசை.

 தமிழிசைக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம்   முதலில் நவோதயா பள்ளிகளின் நதிமூலம் ,ரிஷிமூலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.  நவோதயா பள்ளிகளில் இலவச சீருடை, பாடநூல்கள் இலவசம்.  இவையெல்லாம் தரப்படும் என்பது யாருக்கு?  ஆறாம் வகுப்பில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தான் . அந்த நுழைவுத் தேர்வில் யாரால் வெற்றி பெற முடியும்?  தமிழிசை சொல்வாரா?  பாவம் இதெல்லாம் தெரியாது அல்லது புரியாது.  நுனிப்புல் பயின்ற நிலையில் தமிழிசை பேசுகிறார். பதவி மோகத்தில்,   தான் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவதை புதுவை ஆளுநர்  உணர்ந்து தன்னை திருத்திக் கொள்வது நல்லது.  முந்திரிக்கொட்டை பேச்சுக்கள் தனக்குத்தானே மூக்குடைபடும் நிலையை உருவாக்கிடும் என்பதை உணர்வாராக’’ என்று எச்சரித்திருக்கிறது.