×

வருகைப் பதிவேட்டைத் தூக்கிக்கொண்டு ஓடிய  எடப்பாடி டீம்

 


 பொதுக்குழுவில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டினை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் எடுத்துக்கொண்டு ஓடி விட்டதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட முடியவில்லை.  அதனால் அவர்கள் பொதுக்குழு அரங்கத்திற்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.   இதனால் மண்டபத்திற்கு வெளியே நின்று தவித்து வந்ததால்  பெரும் பதற்றம் ஏற்பட்டது.   கடைசியில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களால் உள்ளேயும் களேபரம் நடந்ததால் பொதுக்குழு பாதியில் நின்றுவிட்டது.

 ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடந் வருகிறது.   இந்த நிலையில் இன்றைக்கு அதிமுக பொதுக்குழு மிகுந்த பரபரப்புக்கு இடையே தொடங்கியது.    2665 பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த பொது குழுவிற்கு வருகை தந்திருந்தனர்.  காலையில் 5 மணியிலிருந்து அவர்கள் பொதுக்குழு அரங்கத்திற்கு வருகை தர ஆரம்பித்து விட்டார்கள்.  காலை 7 மணிக்குள் ஆகவே பெரும்பாலான உறுப்பினர்கள் அரங்கத்திற்கு வந்துவிட்டனர்.

 எடப்பாடி பழனிச்சாமி, ஓ.  பன்னீர்செல்வம் ஆகியோரின் வருகை தாமதத்தினால் பொதுக்குழு பதினொன்று முப்பது மணிக்கு தான் தொடங்கியது.  ஓ.பன்னீர்செல்வம் வந்த நேரத்தில்தான் அவரது பெரும்பாலான ஆதரவாளர்கள் பொது குழுவிற்கு வருகை தந்திருந்தனர்.   அந்த நேரம் பார்த்து வருகைப்பதிவேட்டினை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்கள் இபிஎஸ் தரப்பினர்.

 இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கையெழுத்து போட முடியாமல் போய்விட்டது.  வருகை பதிவேட்டில் கையெழுத்து போட முடியாததால் அவர்களால் பொதுக்குழு அரங்கத்திற்கு உள்ளே செல்லவும் அனுமதி கிடைக்காமல் இருந்தது .  இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என்று பதற்றம் நிலவியது .

அதற்குள்ளாகவே அரங்கத்தின் உள்ளே ஓபிஎஸ்-க்கு எதிராக எடப்பாடி ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர் வெளியே போகும்போது என்று பலரும் தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டே இருக்க சிவி சண்முகம்ம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் இருபத்தி மூன்று தீர்மானங்களை நிராகரிப்பதாக சொல்ல கடுப்பான ஓபிஎஸ் வெளியேற முற்பட்டது முன்னதாக ஓட்டிஎஸ்ஸ் பேச எழுந்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தனர் இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறிய இதனால் பொதுக்குழு அடுத்த மாதம் 16ம் தேதி நடைபெறும் என்று அவைத்தலைவர் அறிவித்திருக்கிறார் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்த எடப்பாடி டீம் அவரது அவர் வந்த வாகனத்தையும் பஞ்சராகி பரபரப்பை ஏற்படுத்தியது ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் உள்ளே விட முடியாத அளவிற்கு வருகைப் பதிவேட்டை தூக்கிக் கொண்டு ஓடியது அங்கு பதற்றத்தை அதிகரிக்கச் செய்தது

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களின் அடாவடியினால் அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்றது.