×

ஆளுநர் - ஆளுங்கட்சி உச்சகட்ட மோதல்! சென்னையில் பரபரப்பு போஸ்டர்

 

கெட் அவுட் ரவி என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நேற்று டிவிட்டர் தளத்தில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வந்த நிலையில் சென்னையில் கெட் அவுட் ரவி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 தமிழக சட்ட சபையில் ஆளுநர் நேற்று உரையாற்றியபோது திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்து தவிர்த்தார்.  இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன .

தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது அவையில் சலசலப்பு ஏற்படுத்தின.  உடனே ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தா.  ர் அதன் பின்னர் ஆளுநருக்கு எதிராக டுவிட்டர் தளத்தில் #GetOutRavi
என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

 இந்த நிலையில் கெட் அவுட் ரவி என்று சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் கெட் அவுட் ரவி என்ற வாசகத்துடன் திமுகவினரால் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

  ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் மோதல் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.