×

9 மேயர் பதவிகளை எதிர்பார்க்கும் திருமா! 

 

சென்னை மேயர் பதவியை மட்டும் தன் கட்சிக்கு கேட்டிருந்தார் திருமாவளவன் என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது தங்கள் கட்சிக்கு 9 மேயர்களை வழங்குமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்திருப்பதாக திருமாவளவனே சொல்கிறார்.
 
 இருபத்தி ஒன்று மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி வாகை சூடி இருப்பதை அடுத்து இதில் மிகவும் முக்கியமான மாநகராட்சி ஆன தலைநகரில் இருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பதவியை தனது கட்சி பெண்ணுக்கு வழங்குமாறு திருமாவளவன் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது தங்கள் கட்சிக்கு  9 மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் பதவி  வழங்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருப்பதாக திருமாவளவனே செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியதால்  கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்லி வருகின்றனர். அந்த வகையில் ஸ்டாலினிடம் வாழ்த்து சொல்ல  சென்ற திருமாவளவன்,   சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர்கள் 6 பேர் போட்டியிட்ட நிலையில் 4 பேர் வெற்றி பெற்ற வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  அதில் ஒருவரான சாந்தி என்கிற யாழினியை  சென்னை மாநகராட்சியின் மேயர் பொறுப்புக்கு பரிந்துரை செய்தால் விடுதலை சிறுத்தைகள் என்றென்றும் திமுகவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று உருக்கமுடன் கோரிக்கை வைத்திருக்கிறார் என்றும், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்,  திமுக அமைச்சர்களிடம் திருமாவளவன் சொன்னதை சொல்ல,  அதைக்கேட்டு திமுகவின் சீனியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  சேகர்பாபு,  மாசு ரெண்டு பேரும்  பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

சட்டென்று  உணர்ச்சிவசப்பட்ட சேகர்பாபு,   மேயர் பதவி திமுகவுக்குத் தான்.   அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.   சென்னை மாநகராட்சியை பட்டியலின பெண்களுக்கு கொடுத்தது திமுகவின் வரலாற்று புரட்சி.  அந்தப் புரட்சியை திமுக மேயர்தான் செயல்படுத்த வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு,  அது தான் சரி என்கிற மாதிரியே ஸ்டாலினும் தலையசைத்து இருக்கிறாராம் என்று செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில்,   திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம்,  மேயர் பதவி விவகாரம் குறித்து செய்திகள் எழுப்பிய கேள்விக்கு,   9 மாநகராட்சிகளில் மேயர் துணை மேயர் பதவிகளை விடுதலை சிறுத்தைகளுக்கு வழங்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் இடம் கோரிக்கை வைத்துள்ளோம்.  அந்த கோரிக்கையை முதல்வர் பரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து அது குறித்து பேசிய திருமாவளவன்,   கடலூரில் மேயர், திருச்சியில் துணை மேயர் பதவியை கேட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.