மன்னன் பட ரஜினி டயலாக் - காயத்ரி ரகுராமுக்கு இது பொருத்தமான பதில் - சூர்யாசிவா
பெண்களை தவறாகப் பேசினால் நாக்கை வெட்டுவேன், இப்போது அந்த கை பூ பறிக்கப் போய்விட்டதா? தனது அடி ஆட்களை வைத்து வார்ரூமில் பெண்களை பற்றி தரைக்குறைவாக பேச அனுப்பிய அண்ணாமலை கட்சியில் உள்ளவர்களைத் தாக்குவதற்காக அத்தகையவர்களை மட்டுமே மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வார்கள். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது நான் சொன்னது உண்மையாகிவிட்டது. பெண் செயற்பாட்டாளர்கள், தலைவர்கள் எங்கே? ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?நான் உங்களுக்கு சொல்கிறேன், அண்ணாமலையின் தலைமையில் நீங்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்கிறார் காயத்ரி ரகுராம்.
ஒரு தலைவர் மற்ற கட்சி ஜாதி கட்சி என்று பேசுவது அழகல்ல. இது பலரது உணர்வுகளை புண்படுத்துகிறது. ஆணவத்தின் உச்சம் அண்ணாமலை என்றும் விமர்சிக்கிறார்.
அடி ஆட்களுக்கும், வார்ரூம்களுக்கும் எல்லாம் அறிவுறுத்துவது அண்ணாமலை தான் என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை பெண்களை எப்படி தவறாக மதிப்பிடுகிறார், பெண்களை பற்றி எப்படி பேசுகிறார் என்பதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு சாட்சி. நீங்கள் பெண்களை பொருட்டாகவே மதிக்கவில்லை என்றால், தமிழ்நாடு மக்கள் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அண்ணாமலை நீங்கள் பெண்களை பொருட்டாகவே மதிக்கவில்லை என்றால், தமிழ்நாடு மக்கள் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள் அண்ணாமலை என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா, ரஜினி - விஜயசாந்தி நடித்த மன்னன் பட வீடியோவை வெளியிட்டு, இந்த வீடியோ காயத்ரிக்கும் ரொம்ப பொருத்தாமனது என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ’’நான் பெண்ணை மதிக்காதவனா நான் பெண்ணுக்கு மரியாதை கொடுக்காதவனா.. உலகத்திலேயே நீ ஒருத்தி தான் பெண்ணென்று நினைச்சா அந்த பெண்ணுக்கு நான் மரியாதை கொடுக்கலேன்னு நினைச்சுக்கோ’’ என்று டயலாக் பேசுகிறார் ரஜினி.