×

விஜயகாந்த் ஓட்டு போட வராததற்கு காரணம் இதுதான்

 

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட வரவில்லை.

 கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் ,  அந்த நிலையிலும்கூட அவர் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து விட்டு சென்றார். ஆனால் இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப் பதிவில் அவர் வந்து தனது வாக்கை பதிவு செய்யவில்லை.

 தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,   அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள்  வாக்குகளைப் பதிவு செய்தனர்.

 வாக்களித்த பின்னர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ,    நியாயமான தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும்.   ஆனால் ஆளும் கட்சி ,ஆண்ட கட்சி, மத்தியில் உள்ள ஆளும் கட்சி அனைவரும் வாக்காளர்களுக்கு பணம்,  கொலுசு, மூக்குத்தி டிபன் பாக்ஸில் வைத்து கொடுக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டினார்.

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏன் ஓட்டு போட வரவில்லை? என்ற கேள்விக்கு ,  கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தலைவர் விஜயகாந்த் ஓட்டு போட வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.