×

அண்ணாமலை தேடிச்சென்ற அந்த இரண்டு நடிகர்கள்...

 

ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கடந்த 15ம் தேதி அன்று கேட்டிருந்தார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில்  ஈரோடு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததும்,   மீண்டும் அண்ணாமலைக்கு சவால் விடுத்திருக்கிறார் காயத்ரி.   அவர்,  ‘’வார்ரூம் என்பது அண்ணாமலையை பெருமை பீத்தல் மகிழ்விப்பது மட்டும்தான். அவர்கள் பாஜகவின் சாதனைகளையோ, மோடியின் சாதனைகளையோ விளம்பரப்படுத்தவில்லை’’என்கிறார்.

’’தனக்கென தனி அரசியல் கட்சி அதுவே ஆரம்பத்திலிருந்தே இலக்கு. தேசிய முக்கிய பணியான ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த பிறகு அண்ணாமலை நேரடியாக பாஜக உறுப்பினராகவில்லை. அவர் இரண்டு நடிகர்களிடம் சென்றார்.  அதன் பிறகு பதவி உறுதியளித்த பிறகுதான் பாஜகவுக்கு வந்தார். இது அனைவருக்கும் தெரியும்’’என்று சொல்கிறார்.  

அவர் மேலும்,  ‘’அண்ணாமலை நீங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பெரிய தலைவர். ஓப்டிக்ஸ் படி உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம். ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ளீர்களா? அல்லது தனித்து போட்டியிடுகிறீர்களா? அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடியுமா? இடைத்தேர்தலுக்காக குழுவை அமைத்துள்ளீர்களா? எனவே நீங்கள் போட்டியிடுகிறீர்களா இல்லையா என்பதை ஏன் அறிவிக்கக்கூடாது.. அதற்கு ஏன் ஒரு குழு? ’’ என்று கேட்கிறார்.