×

பாஜக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததற்கு இதுவே காரணம்- திருச்சி சிவா

 

இந்திய துணைக் கண்டத்திலேயே தன் வாழ்நாளில் 80 ஆண்டு காலம் பொது வாழ்க்கையில் அர்ப்பணித்தவர் தலைவர் கலைஞர் என  திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா புகழாரம் சூட்டியுள்ளார். 

முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை அண்ணா சிலையில் நடைபெற்றது.நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை திமுக குழு தலைவருமான திருச்சி என்.சிவா கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு தையல் மெஷின், ஹாட் பாக்ஸ், நான் ஸ்டிக் தவா உள்ளிட்ட 999 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, “இந்திய துணைக் கண்டத்திலேயே தனது வாழ்நாளில் 80 ஆண்டு காலம் பொது வாழ்க்கையில் அர்ப்பணித்தவர் தலைவர் கலைஞர். தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் தற்பொழுது பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என பொருள் என்றும் தமிழகத்தில் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காத மக்களுக்கும் அனைத்து விதமான திட்டங்களும் சென்றடைவது திராவிட மாடல் ஆட்சி. பாஜக ஆட்சியின் சாதனை பணம் வைத்திருப்பவர்களை பிச்சைக்காரனாக அலைய வைத்தது தான். ஆட்சிக்கு வரும் பொழுது ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என கூறினார்கள், கருப்பு பணத்தை ஒழிப்பேன் என கூறினார்கள் ஆனால் எதையும் அவர்கள் செய்யவில்லை. ஆனால் மீண்டும் பாஜக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் எதிர்க்கட்சியின் ஒற்றுமை இன்மையே காரணம்” எனக் கூறினார்.