×

அரசியலுக்கு வருகிறார் த்ரிஷா! காங்கிரசில் இணைகிறார்

 

அண்மைக்காலமாகவே நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போகிறார் என்றும், காங்கிரசில் இணையப்போகிறார் என்றும் பேச்சு இருந்து வருகிறது.  அதிலும் தற்போது அந்த பேச்சு கொஞ்சம் அதிகமாகியிருக்கிறது.  இதன் மூலம் த்ரிஷா அரசியலுக்கு வருவதும் அவர் அரசியல் செய்யப்போவதும் உறுதி என்று  தெரிகிறது.

நடிகைகளில் பெரும்பாலானோர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.  எம்எல்ஏ முதல் எம்பி வரை ஆகி இருக்கிறார்கள்.  அமைச்சராகவும் ஆகியிருக்கிறார்கள்.  இதில் ஜெயலலிதா ஒருவர் தான் முதலமைச்சரானார்.  பிரதமர் ஆவதற்கும் அவர் முயற்சிகள் எடுத்து வந்த நிலையில்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

 தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த ரோஜா ஆந்திராவைச் சேர்ந்தவர்.  அவர் ஆந்திர அரசியலில் பல காலம் இருந்து வருகிறார்.  அவர் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆகி தற்போது அமைச்சரும் ஆகி இருக்கிறார்.   இந்த நிலையில் திரிஷா அரசியலுக்கு வர முடிவு எடுத்து இருக்கிறார்.

 மிஸ் மெட்ராஸ் ஆன த்ரிஷா 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடிகையாக வலம் வருகிறார்.  இதுவே அவருக்கு பெருமை தான் . இருபது ஆண்டுகள் ஆகிய கூட அவர் இப்போதும் கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.    தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.   சதுரங்க வேட்டை -2  படத்திலும் அவர் நடித்துள்ளார் .  மலையாளத்தில் ராம் பார்ட் 1 படத்தில் நடித்து அவரும் அவர்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் திரிஷா நடிக்கப்போகிறார் என்று தகவல்கள் உறுதியாகி இருக்கின்றன.

 இந்த நிலையில் த்ரிஷா அரசியலுக்கு வருகிறார்.   அவர் காங்கிரஸில் இணையப் போகிறார் என்று அதிகம் செய்திகள் பரவுகின்றன. 

வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வீழ்த்தி வெற்றி பெற துடிக்கிறது காங்கிரஸ்.  பாஜகவில் தமிழகத்தை பொறுத்த வரைக்கும் குஷ்பு பெரிய நட்சத்திரமாக இருக்கிறார்.   அவருக்கு இணையாக த்ரிஷாவை களம் இறக்கினால்  தமிழக அரசியல் பிரச்சாரத்திற்கு சரியான போட்டியாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது என்கிறார்கள்.   

ஆட்சியில் இருக்கும் பாஜகவில் சேராமல் பரபரப்பாக இருக்கும் பாஜகவில் சேராமல் அவர் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்து இருப்பது குறித்தும் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.