×

இரட்டை இலைக்காக டெல்லி பறக்கும் இரண்டு டீம்

 

 இரட்டை இலை சின்னத்தை  பயன்படுத்த தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முடிவு எடுத்துள்ளனர்.   அதே மாதிரி ஓபிஎஸ் அணியினரும் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்த முடிவெடுத்து இருக்கின்றனர். 

 ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் அதிமுக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடுவது  என்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது.   கடந்த முறை இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிருந்தார்.  அதே போன்று இந்த முறையும் தமாகா போட்டியிட ஜி. கே. வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஆனால் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஈரோடு கிழக்கு பகுதியில் அதிமுகவே போட்டிடட்டும் .  அதிமுகவுக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

இந்த முறை தமாகா அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் இருந்தது .  அதிமுக ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்து நிற்பதால் இரட்டை இலை சின்னத்தை யார் பயன்படுத்துவது என்பதில் போட்டி நிலவுகிறது .  இந்த சூழ்நிலையில் தமாகா இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.   அதனால் தமாகா ஒதுக்கி கொண்டு விட்டது.

 எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.  இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாஜக இந்த இடைத் தேர்தலில் களம் இறங்க முடிவு எடுத்திருக்கிறது.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் தாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார்கள்.   இரட்டை இலை சின்ன விவகாரம் இடையூறாக இருப்பதால் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கம்படி கேட்க முடிவு எடுத்திருக்கிறார்கள் . இதை அடுத்து ஓபிஎஸ் தரப்பினரும் இடைத்தேர்தலில் அதிமுக பெயர்,  சின்னம், கொடி போன்றவற்றை பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுத்திருக்கிறார்கள்.

 தவிர ,   ஓபிஎஸ் அடியில் அரசியல்  ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 23ம் தேதி அன்று மாலை ஆறு மணிக்கு சென்னையில் எழும்பூர் அசோகா ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் ,  இரட்டை இலை சின்னம்,  அதிமுக பெயர் விவகாரம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட இருக்கின்றன என்று தகவல்.