×

கை தட்டாத முதல்வர் - கடுப்பான பாஜக எடுத்த முடிவு

 

பிரதமர் மோடியின் பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்ட கேரள முதல்வர் பினராகி விஜயன் மட்டும் கை தட்டாமல் இருந்திருக்கிறார்.  இதை கவனித்துவிட்ட பாஜகவின் கடுப்பாகி இருக்கிறார்கள்.  நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான செயல் என்று கேரள முதல்வருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிராக பெரும் பிரச்சாரம் செய்ய தயாராகி வருகின்றனர் பாஜகவினர்.

 கேரள மாநிலம் கொச்சியில் இந்தியாவிலேயே முதன் முதலாக தயாரிக்கப்பட்ட அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ. என். எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி அண்மையில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.   1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய பக்காற்றிய விக்ராந்த் சேவையை கருத்தில் கொண்டு தான்,  நாட்டின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயர் தான் தற்போது புதிதாக துவங்கப்பட்ட போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டது.  இந்தக் கப்பல் வாயிலாக இந்திய கடற்பரப்பின் வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கி இருக்கிறது. 

 இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி,  ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்துதான் பெருங்கடலாகிறது.  அது போன்று ஒவ்வொரு இந்தியரும் உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுத்தால் இந்தியா எல்லா வகையிலும் தற்சார்பு நாடாக விரைவில் மாறும்.  வலிமையான இந்தியாவாக அமைதியான, பாதுகாப்பான உலகத்திற்கு வழிகாட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

 ஐ. என். எஸ் விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த அந்த விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் பங்கேற்று இருந்தார். ஆங்கிலேய காரலனித்துவ காலத்தில் இருந்து பயன்படுத்திய கடற்படை கொடியை மாற்றி,  மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி படையினர் பயன்படுத்திய கொடியின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய கொடியை பிரதமர் ஏற்றினார்.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள் . ஒருவர் மட்டும் கை தட்டவில்லை என்பது கூட்டத்தில் தனியாக தெரிந்தது.  அது கேரள முதல்வர் பினராகி விஜயன்.    இத்தனை பேரும் இந்த நல்ல நிகழ்ச்சிக்கு கைதட்டும்போது,  கைதட்டி வரவேற்கும் போது முதல்வர் மட்டும்ம் கை தட்டாமல் இருந்ததால் கடுப்பாகி இருக்கிறார்கள் பாஜகவினர்.   இந்த பிரச்சனையை சும்மா விடக்கூடாது  விரைவில் மாநிலம் முழுவதும் எழப்ப வேண்டும் என்ற திட்டமிட்டுள்ளனர். முதல்வரின் இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி,   கம்யூனிஸ்ட் கட்சியினர் நாட்டின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்ய தயாராகி வருகின்றனர்.