×

மிகுந்த ஏமாற்றம்.. சாதகமும், பாதகமும் கலந்த பட்ஜெட் - சசிகலா கருத்து..

 

2022 - 23 மத்திய  பட்ஜெட் சாதகங்களும், பாதகங்களும்  கலந்ததொரு நிதிநிலை அறிக்கை என சசிகலா தெரிவித்திருக்கிறார்.

2022 - 23 ஆம் ஆண்டிற்கான  நிதிநிலை அறிக்கையை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன் நேற்று ( 01.02.22) வெளியிட்டார்.  இயற்கை விவசாயம், நதிநீர் இணைப்பு, இ - பாஸ்போர்ட் உள்ளிட்ட  பல்வேறு துறைசார்ந்த  முக்கிய அறிவிப்புகளும்,  நிதி  ஒதுக்கீடும் இடம்பெற்றிருந்தன.  இருப்பினும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  தனிநபர் வருமான வரி தொடர்பான எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.

மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்தவகையில் மத்திய பட்ஜெட் 2022 குறித்து சசிகலா கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, சாதகங்களும் ,  பாதகங்களும் நிறைந்த கலவையானதொரு நிதிநிலை அறிக்கையாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

 60 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், டிசம்பர் வரை 1.7 கோடி பெண்கள் உட்பட 5.3 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற வேண்டியுள்ளதாக ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளதாக  தெரிவித்தார். தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றும்  சசிகலா தெரிவித்துள்ளார்.