வைத்திலிங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த கோரிக்கை
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்து மனு மீதான விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து இருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி.
உட்ட்சி விவகாரங்களில் நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வாதிட்ட போது, கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம் என்று ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் பெற்ற பின்னர் நாளை விசாரிக்கலாம் என்று கூறியிருக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி .
உயர் நீதிமன்ற தனி நீதிமதியின் தீர்ப்பு அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தவரைக்கும் இறுதியான தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது .ஆகையால் நாளை தனி நீதிபதி அதிமுக பொது குழுவிற்கு தடை விதிக்கப் போகிறாரா? இல்லை அனுமதி வழங்கப் போகிறாரா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசிய போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்திருக்கிறார். அவர் மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால் சென்னை உயர்நீதிமன்றம் என்ன செல்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும், கொடநாடு விவகாரத்தில் பல பேர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். எங்களை வளர்த்து அரசியலில் ஆளாக்கிய அம்மாவின் வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணமாக இருக்கிறது என்றார்.