×

அதிமுகவுக்கு வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும்; அதற்கு ஈ.பி.எஸ்.தான் சரி- விஜயபாஸ்கர்

 

அதிமுகவிற்கு வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டனின் விருப்பம் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இன்று நடைபெற்ற மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா நிறைவு நாளில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விஜயபாஸ்கர் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கட்சி என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல, அதிமுக நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம்,இன்றைக்கு மட்டுமல்ல முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் பல்வேறு கால கட்டங்களில்  இது போன்ற சூழலை எதிர்கொண்ட இயக்கம்தான் அதிமுக.இந்த மகத்தான மக்கள் இயக்கம் இன்றைய இந்த சிறு  பிரச்சனைகளை எல்லாம் தாண்டி  வரும்காலத்தில் ஆளும் கட்சியாக வரும், இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் வேண்டியதில்லை.

றிப்பாக இந்த காலகட்டத்தில் 99 சதவீதத்திற்கும் மேலாக தொடர்ந்து மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் மற்றும் எல்லா இடங்களிலுமே அடிமட்ட தொண்டர்கள் வரை ஒற்றைத் தலைமை என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கின்றது.அந்த ஒற்றைத் தலைமை வலுவான ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம் எண்ணம்.அந்த ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக உள்ளவர் எடப்பாடி பழனிசாமி  தான். அவர் ஒற்றை தலைமையை ஏற்கவேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் எங்கள் நலன் என்பதையும் தாண்டி கட்சி நலன் தான் ரொம்ப முக்கியம், இதை மனதில் வைக்கும் போது எல்லா விஷயத்திற்கும் நிறைவான தீர்வு கிடைக்கும், 

திட்டமிடப்பட்டபடி அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எல்லா விதமான கருத்து மாச்சிரியங்களுக்கும் அப்பாற்பட்டு அது ஜாதி மதத்திற்கும் அப்பாற்பட்டு மகத்தான மக்கள் இயக்கமாக தொடர்ந்து செயல்படும்,இதில் எல்லா கருத்துகளுமே புரியும் வகையில் அடங்கியுள்ளது. ஜூலை 11ம் தேதி  திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” எனக் கூறினார்.