×

ஜெயக்குமார் அரை நிர்வாணப் படுத்தப்பட்டாரா?  அதை போட்டோ எடுத்து மேலிடத்திற்கு அனுப்பினார்களா?

 

பழிக்குப்பழியாக ஜெயக்குமார் அரைநிர்வாண படுத்தப்பட்டார்.  விசுவாசத்தைக் காட்டும் விதமாக அதிகாரிகள் அதை போட்டோ எடுத்து மேலிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற தகவல் பரவி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.

 கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.   அப்போது சென்னை ராயபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.  பின்னர் அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரின் கைகளைப் பின்னால் கட்டி இழுத்து செல்லச்சொன்னார்.

 அப்போது அந்த நபர் சட்டையை கழட்டச் சொல்லி அரைநிர்வாண படுத்தப்பட்டார்.   இந்த வழக்கில்  இரவோடு இரவாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு அன்று இரவே நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.  நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு முன்பாக ஜெயக்குமாரின் சட்டையையும் அதேபோல கழட்டி ஜெயக்குமாரை அரைநிர்வாண படுத்தியதாக  ஒரு தகவல் பரவி வருகிறது.

 ஜெயக்குமார் இரவு நேரத்தில் வீட்டில் லுங்கி , டீசர்ட்டில் அமர்ந்திருந்த போது திடீரென்று போலீசார் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்.  அவரை கைது செய்ய சென்ற போது,  நான் எங்கேயும் ஓடிப்போகிற ஆள்  இல்லை.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . டிரஸ் மாத்திட்டு வந்திடறேன் என்று லுங்கி ,  டீசர்ட் மாற்றிவிட்டு வழக்கமான வெள்ளை நிற வேஷ்டி சட்டைக்கு மாற அனுமதி கேட்டிருக்கிறார்.   ஆனால் போலீசார் அதற்கு அனுமதிக்காமல் கைது செய்து  விட்டார்கள்.

 நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து ஜெயக்குமாரிடம் சில மணிநேரங்கள் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.   கைது செய்யப்பட்டவரை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பாக மாஜிஸ்திரேட்டு முன்பு நிறுத்தும்போது அவரது அங்க அடையாளங்களை குறித்துக் கொள்வது வழக்கம்.   இது சாதாரணமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சட்டையைக் கழற்றச் சொல்லி போலீசார் அடையாளம் தேடுவார்கள்.  அதுவே விஐபிகள் என்றால் அவர்களிடமே அங்க அடையாளங்களை கேட்டு குறித்துக் கொள்வார்கள்.   இது நடைமுறையில் இருக்கிறது.

 ஆனால் அன்றைக்கு ஜெயக்குமாரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்துச் செல்வதற்காக அவரது அங்க அடையாளங்களை குறிக்கும் வழக்கமான நடவடிக்கைக்காக சட்டையைக் கழற்றச் சொல்லி இருக்கலாம்.   அந்த அடிப்படையில் ஜெயக்குமாரை அரை நிர்வாணப்படுத்திவிட்டதாக அதை புகைப்படம் எடுத்து சில போலீசார் தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக அதை  மேலிடத்திற்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்றும் தகவல்.  அதேநேரம் அன்றிரவு நீதிபதி முன்பு ஜெயக்குமார் ஆஜர்படுத்த படும்போது கைது செய்யப்படும்போது இருந்த லுங்கி டீசர்ட்டில் அவர் இல்லை.   வழக்கமான வெள்ளை வேட்டி சட்டையில் இருந்திருக்கிறார். இதனால் அவராகவே சட்டையை மாற்றி கொண்டிருக்கிறாரா? அவராகவே சட்டை மாற்றிக் கொள்ளும்போது அதை போட்டோ எடுத்து இப்படி கதை கட்டி விடுகிறார்களா என்றும் தகவலும் பரவுகிறது.