×

நாங்கள் தயார்! ஓபிஎஸ் பின்னால் அணிதிரளும் அதிருப்தியாளர்கள்

 

அண்ணா திமுகவை காப்பாற்ற நாங்களும் உங்களுடன் போராட தயார் என்று ஓபிஎஸ்சிடம் உறுதி அளித்துள்ளனர்  எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களின் அதிருப்தியாளர்கள்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்களை எல்லாம் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .  இதனால் ஓ. பன்னீர்செல்வம்,  அதிமுகவில் பொறுப்புகள் கிடைக்காமல் இருக்கும் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்ட முடிவு செய்து இருக்கிறார்.   அதிருப்தியாளர்களும் ஓபிஎஸ் பின்னால் அணிதிரள தயாராகி இருக்கிறார்கள். 

அதிமுகவை அழிக்கப்பார்க்கிறார் ஓபிஎஸ் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் குற்றம் சாட்டி வர,  எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க  பார்க்கிறார் நாங்கள் காப்பாற்ற போகிறோம் என்று ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தினை தொடங்கி இருக்கிறார்கள்.

 அதிமுகவில் அதிர்ச்சியாளர்களை புதிய நிர்வாகிகள் அறிந்து வருகிறார் ஒபிஎஸ் மாவட்ட செயலாளர்களையும் அறிவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர் சார்ந்த மாவட்ட செயலாளர்களுக்கு எதிரணியில் இருக்கும்  பல அதிமுகவினர் ஓபிஎஸ் தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அண்ணா திமுகவை காப்பாற்ற நாங்களும் உங்களுடன் போராட தயார் என்று உறுதி அளித்துள்ளனர் என்று தகவல். இதனால் விரைவில் நிர்வாகிகள் பட்டியல் வெளிவர இருக்கிறது என்கிறார் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன்.

ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவில் உருவாக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்ட தொகுதி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பதவிகளை மீண்டும் உருவாக்குவதாக அறிவித்திருந்த ஓபிஎஸ், மாவட்ட செயலாளர்களையும் அறிவித்து வருகிறார்.  புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார் ஆனதும்,  பொதுக்குழுவை கூட்டவிருக்கிறார் என்றும் தகவல்.