×

நான் துபாய் ஹோட்டலில் யாரை சந்தித்தேன்? அண்ணாமலையிடம் ஆதாரம் கேட்கும் காயத்ரி

 

முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் சென்னையில் சோமர்செட் ஓட்டலில் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தி இருக்கிறார் காயத்ரி ரகுராம் என்ற  குற்றச்சாட்டின் பின்னணியில் தான் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் என்று பாஜகவின் நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கூறியிருந்தார். 
இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த காயத்ரி,  நண்பரின் பர்த்டே பார்ட்டிக்காக சென்றிருந்தேன்.  அப்போது அங்கு வயது வந்த விஐபிக்களில் சபரீசனும் ஒருவர். மரியாதை நிமித்தமாக ஹாய், ஹலோ சொன்னேன் . அவ்வளவுதான்.   மற்றபடி வேறு எதுவும் பேசவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார்.

 இதற்கு பாஜகவினர்,   ஹாய்.. ஹலோ சொல்வதற்கு ஒரு மணி நேரம் எதற்கு? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

 இதன் பின்னர் அண்ணாமலையை முன்னை விட அதிகமாக விமர்சித்து வருகிறார் காயத்ரி.  இதற்கு பாஜகவில் இருந்து விலகி இருக்கும் திருச்சி சூர்யா சிவா. முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் இப்போது மத்திய அமைச்சராகி விட்டார். ஆனாலும் அங்கிருந்தபடியே தமிழக பாஜகவில் தனது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  அவரால் நியமிக்கப்பட்டவர்களை வைத்துக்கொண்டு தற்போது இருக்கும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அவர் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  அண்ணாமலையின் வளர்ச்சியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.  அமைச்சர் ஆன  பின்னால்  வந்த தலைவருக்கு இடம் அளிக்காமல் இடையூறு செய்து கொண்டிருக்கிறார்.  அவரின் ஆளு தான் காயத்ரி ரகுராம்.  அதனால்தான் அவரை வைத்து பேச வைக்கிறார் . அண்ணாமலைக்கு எதிராக பேச வைக்கிறார்.  காயத்ரி ரகுராமை பேச விட்டு வேல்முருகன் வேடிக்கை பார்க்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

 இந்த நிலையில்,  காயத்ரி ரகுராம் சோமர் செட் ஓட்டலில் சென்னையில் சபரிசனை சந்தித்தது போல் துபாயில் ஒரு திமுக பிரமுகரை சந்தித்து பேசி இருக்கிறார் என்றும் செய்திகள் பரவுகின்றன.   இதை காயத்ரி ரகுராம் மறுத்திருக்கிறார்.   ’’முதலில் அவர்கள்,  சென்னை சோமர்செட் ஹோட்டலில் சபரீசனுடன் சந்தித்ததாக என்னை மோசமான முறையில் குறிவைத்தனர்.   இப்போது துபாயில் ஒரு திமுக பிரமுகரை சந்தித்ததாக மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் துபாய் ஹோட்டலில் யாரை சந்தித்தேன்? இதற்கு  அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்?’’ என்று கேட்கிறார்  காயத்ரி.   அவர் மேலும்,  ‘’அதுவரைக்கும் நான் அமைதியாக இருக்கப் போகிறேன்’’என்கிறார்.