×

இது எங்களுக்கு சாதகமாக அமையுமா..?ஓபிஎஸ்க்கு வந்த சந்தேகம்

 

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்கிறேன் என்று ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ. பி. ரவீந்திரநாத் எம்.பி தெரிவித்து  அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.  தற்போது ஓ.பன்னீர்செல்வமும் புதுமைப்பெண் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

 முதல்வர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து  பேசியதும்,  திமுகவின் ஓராண்டு கால ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று வாழ்த்து சொன்னதற்கும் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ரவீந்திரநாத் எம். பியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் அவர் புதுமைப்பெண் திட்டத்தையும் வரவேற்று பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  பழனி கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக இலவச லேப்டாப் , சைக்கிள் என்று பல்வேறு சலுகைகளை வழங்கினார்.   அதேபோல தற்போது இருக்கிற அரசு கொண்டு வந்திருக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

 ஓபிஎஸ் மகனை அடுத்து ஓ.  பன்னீர்செல்வம் திமுகவின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார்.   மதுரை விமான நிலையத்திற்கு வந்து அவரிடம் செய்தியாளர்கள் சந்தித்தபோது,    அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.   தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த புதுமைப்பெண் திட்டம் நீடூழி வாழ்க என்று தெரிவித்திருக்கிறார்.

 அவர் மேலும்,  அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம்.  இது எங்களுக்கு சாதகமாக அமையுமா என்பது நீதிபதியின் தீர்ப்பில் தான் உள்ளது என்றார்.