×

நீ எஸ்.சி தானே.. திமுக அமைச்சர்களின் தீண்டாமை மாடல்

 

 ஏம்மா… நீ எஸ்.சி தானே… என்று ஒன்றியக் குழு தலைவரை  அமைச்சர் பொன்முடி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்துள்ள மணம்பூண்டியில் நியாய விலை கடையின் கட்டடத் திறப்பு விழாவில்  திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி பங்கேற்று திறந்துவைத்தார். 

விழாவில் அவர் உரையாற்றும் போது, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைக் கூறியபடியே, முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரான தலித் பெண்மணியை காட்டி 'ஒன்றியக் குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்'  என்று சொன்னதோடு, அப்பெண்ணைப் பார்த்து, "ஏம்மா...நீ எஸ்.சி.தானே" என்று கேட்க, அவரும் எழுந்து நின்று ‘ஆமாம்’ என்று சொல்ல நேரிட்டது. 

அரசு நிகழ்ச்சி மேடையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ஒரு மாநிலத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் இப்படி சாதியை கேட்பது எந்தவகையில் நியாயமாக முடியும் என்று கொதித்தெழுந்திருக்கிறார் ஸ்டாலின் தி.    அவர் மேலும்,  இதற்கு 'இதுதான் திராவிட மாடல்' என்கிற அடையாளம் வேறு. இதையெல்லாம் இவர்களால் கைவிட முடியாது. சாதியில் ஊறிப்போனக் கூட்டத்திலிருந்து ஒருக் கூட்டம்தான்  திராவிட மாடல் எனும் வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை என்கிறார். 

வெறும் கண்டனங்களோடு முடிந்துவிடக் கூடியதல்ல இப்பிரச்சனை. தமிழக திமுக அரசு, பொன்முடியை அமைச்சர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். பொது இடத்தில் தலித் சமூகத்துப் பெண்ணை சாதி கேட்ட வன்கொடுமைக்காக, பொன்முடி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அவர் மேலும்,  தலித் சமூக அலுவலரை சாதிரீதியாக இழிவு படுத்தினார் அமைச்சர் கண்ணப்பன்.  தலித் சமூகத்தைச் சார்ந்த சென்னை மாநகராட்சி தலைவரை பத்திரிக் கையாளர்கள் முன்னிலையில் ஒருமையில் பேசினார் அமைச்சர் கே.என்.நேரு.  தலித் சமூகத்தைச் சார்ந்த ஒன்றியக் குழுத் தலைவரான பெண்மணியை சாதிக் கேட்டு இழிவு படுத்துகிறார் அமைச்சர் பொன்முடி.  திமுக தீண்டாமையை கடைப்பிடிக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள். அத்தனையையும் வேடிக்கைப் பார்க்கிறது முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சி.   திராவிட மாடலா? தீண்டாமை மாடலா?  என்ற கேள்வியை எழுப்புகிறார்.