×

பயப்பட வேண்டியது நீங்கள் தான் - ஆ.ராசாவுக்கு பாஜக பதிலடி

 

 பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி தமிழக எம்பிக்களுக்கு உள்ளது . தமிழக எம்பிக்கள் 9 பேரை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியிருந்தார்.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது ,   ‘’நீதிமன்றங்களை பார்த்து கூட பிரதமர் மோடி பயப்படுவதில்லை.   ஆனால் மு.க. ஸ்டாலினையும் திமுக எம்.பிக்களையும் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்.  பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி 9 தமிழக எம்.பிக்களுக்கு உள்ளது’’ என்றார்.

 தொடர்ந்து பேசிய அவர்,   நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் பிரதமர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். ஆனால் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை என்றார்.

நீதிமன்றங்களை பார்த்து கூட பிரதமர் மோடி பயப்படுவதில்லை. ஆனால், மு.க.ஸ்டாலினையும் திமுக எம்பிகளையும் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்  என்ரு ஆ.ராசா, எம் பி. பேசியதற்கு,   ‘’நீதி மன்றங்கள் நியாயம் வழங்குவதால் பயப்படுவதில்லை. ஆனால், மற்றவர்களின் ஊழலால், இவர்களின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகளால் நாட்டின் வளர்ச்சிக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து வந்து விடுமோ என்று  நினைக்கிறாரோ? அது பயம் அல்ல. எச்சரிக்கை. பயப்பட வேண்டியது நீங்கள் தான்’’என்று பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.