×

சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னபோதே அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருக்கணும் -திருமா

 

சுட்டுத் தள்ளுங்கள் என்று அண்ணாமலை உத்தரவிட்டபோதே அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்க வேண்டும் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா.

 அவர் மேலும்,  ஊடகங்கள் எப்போதும் தன்னை குறித்து பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் அண்ணாமலை.  தன்னை முன்னிறுத்துவதில் மிகவும் குறியாக இருந்து வருகிறார்.  

 தமிழ்நாடு அரசியலில் எப்போதும் ஊடகங்கள் அவரை தன்னை பற்றி பேச வேண்டும் என்கிற ஒரு வகையான மேனியா அவருக்கு இருப்பதை உணர முடிகிறது என்று சொல்லும் திருமா எதையாவது பரபரப்பாக பேச வேண்டும் அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டும் தனிநபர் மீதான விமர்சனங்களை மிகக் கடுமையாக முன்வைக்க வேண்டும் என்கிற யுக்திகளை அவர் கையாண்டிருக்கிறார்.

 ராணுவ வீரர்களிடம் சுட்டுத் தள்ளுங்கள் தமிழ்நாடு பாஜக பார்த்துக்களும் என்று கட்டளையிட்டார்.  அந்த பேச்சுக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்.   அப்போது வழக்கு பதிவு செய்யாததால் தற்போது வழக்கு பதிவு செய்ய மீண்டும்.   தற்போது வழக்குபதிவு செய்ய வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன் என்கிறார்.