நிச்சயம் பொதுக்குழு நடைபெறும்; ஈபிஎஸ்-க்கே பெரும்பான்மை - கோகுல இந்தியா
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதிமுக பொதுக்குழு கண்டிப்பாக நடைபெறும் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழி சாலையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, “தன்னுடைய முழு ஆதரவை எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அளிக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்போம். கட்சி மீது எத்தனை வழக்குகள் வந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்.
கட்சியின் நலன் கருதி ஓ. பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிரேன்.சொன்னப்படி நிச்சயமாக பொதுக்குழு நடைபெறும் . நீதிமன்றம் சென்றாலும் பெறுபான்மை எங்களுக்கு தான் இருக்கிறது. ஆக திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்” என தெரிவித்தார்.