×

யானைப் பசிக்கு சோளப் பொரியா?… திமுக பட்ஜெட்டை கலாய்த்த ஜெயக்குமார்

திமுக தாக்கல் செய்த பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப் பொரி போலிருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு, இன்று முதன்முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் உரையாற்றி பெட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுகவின் பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு மகளிர் கடன் தள்ளுபடி போன்ற அதிரடி அறிவிப்புகளும் நகைக்கடன்
 

திமுக தாக்கல் செய்த பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப் பொரி போலிருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு, இன்று முதன்முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் உரையாற்றி பெட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுகவின் பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு மகளிர் கடன் தள்ளுபடி போன்ற அதிரடி அறிவிப்புகளும் நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டங்களின் விவரங்களும் இடம்பெற்றிருந்தது.

திமுக அரசின் இந்த பட்ஜெட் வரவேற்பை பெற்ற அதே அளவுக்கு விமர்சனங்களையும் பெற்றது. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது, திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார். இந்த நிலையில், திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப் பொரி போலிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

‘மக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பட்ஜெட் தான் திமுக அரசின் பட்ஜெட். பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு மூன்று ரூபாய் குறைத்து விட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக கூறி மாணவர்களை திமுக அரசு குழப்பிவிட்டது. பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்று தான் கூறுகிறார்கள். தெளிவான நிலை இல்லை. அடுத்து சொத்துவரி, பேருந்து, மின் கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.