×

அதிமுக சரியாக இல்லை - சசிகலா பேட்டி

 

அதிமுகவை பலப்படுத்தி  2026-ல் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வி.கே.சசிகலா நிவாரண உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக தற்போது சரியாக இல்லை. அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன. கட்சியை வலுப்படுத்தி 2026ம் மக்களாட்சி அமைக்கப் போகிறோம்.சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தை பிரித்துள்ளார்கள். பெரிய பிள்ளைக்கு இது, கடைக்குட்டி பிள்ளைக்கு இது என அந்த காலத்தில் பெரியவர்கள் சொத்து பிரிப்பார்கள் அதேபோல் தான் தற்போது இவர்கள் அரசாங்கத்தை பிரித்து வைத்துள்ளார்கள். இதனால்தான் எந்த வேலைகளையும் சரிவர செய்ய முடியவில்லை. நான் சொல்வதை கேட்டு இப்போதாவது இதனை சரி செய்யுங்கள். 

அம்மா ஆட்சிக்காலத்தில் கோடை நாட்களிலேயே சென்னையில் உள்ள 3 கூவம் ஆறுகளையும் தூர்வாரி விடுவோம். ஆனால் அம்மா செய்ததை திமுக-வினர் செய்யவில்லை. . ஆட்சிக்கு வந்த திமுக அரசு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதே தவிர, மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க தவறிவிட்டது.  வெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டாலின் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்றார்.