×

பாஜகவை பகைத்து நிற்க கூடிய தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது- செல்லூர் ராஜூ

 

ஒன்றிய பாஜகவை பகைத்து நிற்க கூடிய தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு  இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை கெங்கை அம்மன் கோவில் பகுதியில் அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முதல்வர் என்றால் எடப்பாடி போல இருக்க வேண்டும. திமுக முதல்வர் சப்பானி மாதிரி இருக்கிறார். Dengue Mlariya korona என்பது தான் திமுகவின் விரிவாக்கம். திமுக வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. திராவிட மாடலை திமுக கூட்டணி கட்சிகளே ஏற்காது. திராவிட மாடல் தமிழகத்திலேயே வெற்றி பெற முடியவில்லை.

மத்திய பாஜகவை பகைத்து நிற்க கூடிய தைரியம் எடப்பாடிக்கு இருக்கிறது. மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பது குறித்து முதல்வர் குடும்பத்தினர் சதுரங்க வேட்டை திரைப்படத்தை  பார்த்து கற்றுக்கொண்டுள்ளனர்.மகளிர் உரிமை திட்டம் முழுமையாக அனைத்து பெண்களையும் சென்றடையவில்லை, பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாததால் தமிழகம் போராட்ட களமாக உள்ளது. சேராத இடங்களில் சேர்ந்தால் என்னவாகும் என்பதற்கு எடுத்துகாட்டே செந்தில் பாலாஜி, மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை தற்போதும் விற்க படுகிறது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எடப்பாடி கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க திமுகவிற்க்கு தைரியம் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார்.