ஆயிரம் எடப்பாடி பழனிச்சாமி வந்தாலும், ஒரு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஈடாகாது- வைத்திலிங்கம் 

 
Vaithilingam

எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாட்டை நடத்துவதாக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு கலைக்கப்பட்டு, அடிப்படை தொண்டர்களால் புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும், போலி பொதுக்குழு மூலம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லாது, எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக ஜாதி, மதம், கடந்து அனைத்து மக்களுக்குமான இயக்கமாக இருக்க வேண்டும், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான், புதிய பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் ஓபிஎஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநாட்டில் உரையாற்றிய வைத்திலிங்கம், “ஆயிரம் எடப்பாடி பழனிச்சாமி வந்தாலும், ஒரு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஈடாகாது. மூன்று முறை முதல்வர் பதவியை திரும்ப கொடுத்தவர் ஓபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறினார்.