×

யோகி ஆதித்யநாத் கங்கையில் ஏன் குளிக்கவில்லை தெரியுமா?...   அகிலேஷ் யாதவ் 
 

 

முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த திங்கட்கிழமையன்று கங்கையில் நீராடவில்லை. ஏனெனில் ஆறுகள் எதுவும் சுத்தமாக இல்லை என்பதை அவர் நன்கு அறிந்தவர் என்று அகிலேஷ் யாதவ் தாக்கினார்.

உத்தர பிரதேசம் ஜான்பூரின் மல்ஹானி பஜாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் கூறியதாவது: நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால், எதிர்க்கட்சிகள் மக்களை சமாதானம் செய்து, 400 இடங்களை வெல்வது சாத்தியமாகும். இந்த வரலாற்று மக்கள் ஆதரவு பா.ஜ.க.வின் வரலாற்று தோல்வியை குறிக்கிறது. காசி விஸ்வநாத் பாதை தயாராக இருப்பது நல்லது. 

ஆனால் ஏழைகளுக்கு மருந்துகள், ஆக்சிஜன், படுக்கைகள் தேவைப்பட்டபோது,  பொதுமக்களை பா.ஜ.க. அனாதைகளாக்கியது. அந்த புதிய திட்டங்களை துவக்கி வைக்கும் போது, முந்தைய அரசுகளின் பங்களிப்புகளை அவர்கள் ஏற்க வேண்டும். எங்கள் தொப்பிகளின் சிவப்பு நிறம், புரட்சி, உணர்ச்சி, திருமண ஆடை, சூரியன் மற்றும் அனுமான் ஜி. பா.ஜ.க. உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவில்லை. 

முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த திங்கட்கிழமையன்று கங்கையில் நீராடவில்லை. ஏனெனில் ஆறுகள் எதுவும் சுத்தமாக இல்லை என்பதை அவர் நன்கு அறிந்தவர். லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பான விசாரணையில், மத்திய அமைச்சரும், அவரது மகனும் சதி செய்தது நிரூபணமாகியுள்ளது. இப்போது அரசு மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் மாநில உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.