×

ஆல் இந்தியா ரேடியோ விவகாரம் - தெளிவுபடுத்திய அமைச்சர் முருகன்

 

 எய்ம்ஸ் மருத்துவமனை கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் வரும் என்று தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.  ,  மேலும் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படும் என்பது தவறான தகவல். அது மூடப்படாது என்றும் தெரிவித்தார். 

 கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது,   இன்று 12ஆம் தேதி 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி  அர்ப்பணிப்பது குறித்து கேள்விக்கு,    இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள்.  தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.   இதில் ஆயிரத்து 450 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்திருக்கின்றன.   அதேபோல் 20 கோடி ரூபாய் மதிப்பில் செம்மொழி தமிழாய்வு மையம் திறக்கப்பட இருக்கிறது.   அங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்ககால புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

 அவர் மேலும் இதுகுறித்து,   ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி திருக்குறளை முன்னிலைப்படுத்தி வருகிறார்.   நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். 

 ஆல் இந்தியா ரேடியா மூடப்படும் என்ற என்று வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு,   ஆல் இந்தியா ரேடியோ மூடப்படும் என்று  தகவல் பரவுகிறது.   ஆனால் அது மூடப்படாது என்று அழுத்தமாகச் சொன்னார்.   டிடி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அலுவலர்கள் தற்பொழுது நியமிக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொண்டார்.

 எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டம்.   கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வரும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.