×

 ’’இவனுக எல்லாரும் டயர் நக்கிகள் என்று சொன்ன அன்புமணி ராமதாஸ் வீட்டில் தலைவாழை  சாப்பாடு!   சவடால் தனம் எங்கே போனது? ’’

 

 எடப்பாடி ஆம்பள பேச்சுக்கு திமுகவினர் கொதித்து எழுந்துள்ளனர்.  கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர்  பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.   திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில் ‘ஆண்மை ஆராய்ச்சியாளர்’ என்று தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. 

 ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  நீ சரியான ஆம்பளையா இருந்தா, மீச வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டிய மடிச்சு கட்டி வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா நேராக களத்தில் இறங்கிப் பார் என்று  முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்திருந்தார்.  இது குறித்து முரசொலியில் எழுதப்பட்டிருக்கும் ஆண்மை ஆராய்ச்சியாளர் தலையங்கத்தில் எடப்பாடிக்கு பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

 ஊர் ஊராக போய் லாட்ஜ்களில் ரூம் போட்டு ஆண்மை ஆராய்ச்சி செய்யும் ஆட்களின் வரிசையில் ஒருவர் இப்போது இணைந்து இருக்கிறார்.   அவர் ஈரோட்டில் ரோட்டில் நின்று கொண்டு ஆண்மை இருக்கிறதா என்று தெருவைப் பார்த்து கேட்கிறார்.   ஆம்பளையா இருந்தா வா என்று அழைக்கிறார்.  மீசை வைத்திருக்க வேண்டும் என்கிறார்.   ஆத்திரக்காரனுக்கு எதுவும் இருக்காது என்பது அவரது உடல் மொழியிலிருந்து தெரிகிறது.  

 இவ்வளவு ஆத்திரம் ஒருவருக்கு உருவானது ஏன்? ஈரோடு கிழக்கில் தோற்றுப் போக போகிறோம் என்ற பயமா?  சட்டமன்றத் தேர்தலிலேயே தோற்றுப் போன பிறகு வராத ஆத்திரம் இப்போது ஏன் வர வேண்டும்?   நாடாளுமன்றத் தேர்தலில் பன்னீர் மகன் தவிர அனைவரும் தோற்ற பிறகும் வராத ஆத்திரம் இப்போது ஏன் வர வேண்டும்?   ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தோற்றபோது வராத ஆத்திரம் இப்போது ஏன் வரவேண்டும்?  

 ஜெயலலிதா இவை அனைத்தையும் கொடுத்து விட்டுத்தான் போனார்.  அவை அனைத்தையும் நாசம் செய்த போது வராத போது ஆத்திரமும் கோபமும் இப்போதைய வர வேண்டும்?  ஏனென்றால் இப்போது சொந்த கட்சியையும் இழந்து அதாவது வேட்டியையே இழந்து நிற்பதால் ஆத்திரம் அதிகமாக வரத்தானே செய்யும். 

 இடைக்கால தற்காலிக அரைகுறை பொதுச்செயலாளராக அதிமுகவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த உதவாக்கரை பதவியையும் தக்க வைக்க முடியவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும் .  

ஒருவன் கிழிந்த நோட்டு வைத்திருந்தான்.   அந்த கிழிந்த நோட்டை ஒட்டிக்கொண்டு போய் கொடுத்ததும் கடைக்காரர் சொன்னாராம் இது கள்ள நோட்டு என்று. அதாவது கள்ள நோட்டுக்கு எத்தனை ஒட்டு போட்டாலும் அது செல்லாது அல்லவா.   அதை கடைக்கடையாக தூக்கிக் கொண்டு திரிந்தவனை போல இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை தூக்கிக் கொண்டு திரிந்தால் அதுவே செல்லாது,  உன் பொதுக்குழுவே செல்லாது , அது பொதுக்குழுவை அல்ல , அது கட்சியே அல்ல என்கிற அளவுக்கு உடல் உறுப்பு அத்தனை பாகமும் அழுகி கிடக்கும் கட்சிக்கு உதடு மட்டுமே ஒழுங்காக இருக்கிறது . அதை வைத்து உளறிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்.

 கட்சியில் நான்கு பேரை கப்பம் கட்டுவதற்காக வைத்திருந்தார் ஜெயலலிதா .  சொறி, சிரங்கு, படை,  தேமல் என்று அதிமுக பெண் அமைச்சர் ஒருவரே அப்போது கமெண்ட் அடிப்பார்.   அந்த நால்வரில் ஒருவராக இருந்தவர் இவர்.   ஒழுங்காக போட்டுக் கொடுத்திருந்தார் என்பதால் ஜெயலலிதாவை விட சசிகலாவின் அனுக்கிரகம் அதிகமாகவே இருந்தது இவருக்கு.   

பன்னீர் கம்பி நீட்டியதும் இவருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார் சசிகலா. டேபிளுக்கு கீழே போய் ஊர்ந்து போய் காலை தேடி மீசையில் மட்டுமல்ல வேட்டியிலும் கூவத்தூர் அழுக்கு பட உருண்டு போய் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவருக்கு மீசை இருந்தால் என்ன வேட்டி விலகினால் என்ன சட்டை கிழிந்தால் என்ன? பதவியை துண்டு வேட்டியை கொள்கை என்று சொல்வார்கள் பெரியவர்கள்.   பதவி கிடைக்குமானால் துண்டை காணும் துணியை காணும் என்று ஓடிப்போய் மன்னார்குடி மண்ணையே தின்று செரித்தவர்கள் ஈரோடு மண்ணில் வேன் மேலே ஏறலாமா? வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

 இவனுக எல்லாரும் டயர் நக்கிகள் என்று அன்புமணி ராமதாஸ் சொன்னபோது இவர்களுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.  அதை விட்டுவிட்டு தைலாபுரம் தோட்டத்தில் தலைவாழை இலை போட்டு சாப்பிட்ட போது இந்த சவடால் தனம் எங்கே போனது?   ஏன் அப்போது நாக்கு எழவில்லை?  மீசை தொங்கியது ஏன் ?  வேட்டியை கக்கத்தில் சுருட்டி வைத்துக்கொண்டு சாப்பிட்டார்கள்.

 கோடநாடு கொலை கொள்ளைக்கு காரணம் இவர்தான் என்று நேருக்கு நேராக ஒரு பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டிய போது மீசையின் ஒரு முனை கூட பிடிக்கவில்லையே ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கும் அந்த தலையங்கம்,   சிலரிடம் தெருவில் சண்டை போடக்கூடாது என்பார்கள்.  அதனால் தான் அவரது பெயர் இங்கு பயன்படுத்தப்படவில்லை என்று  முடித்து இருக்கிறது.

 இந்த தலையங்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்று பெயரை குறிப்பிடாமல் எழுதப்பட்டிருக்கிறது.