"விஜயலட்சுமி சீமானை அட்டாக் பண்ணினா... சீமான் என்னை அட்டாக் பண்ணுவார்"- அண்ணாமலை
May 27, 2024, 19:26 IST
எங்களைவிட பாஜக அதிக ஓட்டுகள் பெற்றால் கட்சியை கலைத்துவிடுவேன் என சீமான் கூறிய நிலையில், எங்களின் 50 சதவீத ஓட்டுகளையாவது அவர் பெறுகிறாரா எனப் பார்ப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சீமான் பாவம், விஜயலட்சுமி சீமானை பத்தி ஏதாச்சும் பேசினா சீமான் என் மேல ஏதாவது பேச கிளம்பி வருவாரு. விஜயலட்சுமி சீமானை அட்டாக் பண்ணினா... சம்பந்தமே இல்லாமல் சீமான் என்னை அட்டாக் பண்ணுவார்... சீமானை நான் வம்புக்கு இழுத்தனா? அவர் அக்காவுக்கு பதில் சொல்லாமல் என்கிட்ட வராரு. நான் பெருந்தன்மையாக சொல்கிறேன். ஜூன் 4 ஆம் தேதி வாக்கு முடிவுகள் வந்துவிடும். இன்று திராவிட கட்சிகளின் துணையில்லாமல் பாஜக தமிழகத்தில் தனித்து நிற்கிறது.