கர்நாடகாவில் 39 இடங்களில் வெற்றியை தேடிக்கொடுத்த அண்ணாமலை
இந்நிலையில் கர்நாடக பேரவை தேர்தலில் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட 214 இடங்களில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக 60 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இரண்டு கட்சிகளுமே தலா 5 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க போவது உறுதியாக இருக்கிறது. ஆட்சியை இழந்துவிட்டது பாஜக. கர்நாடகத்தில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது. இந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகா சென்று வந்தும், வீதி விதியாக சென்று வாக்கு கேட்டும் பாஜகவுக்கு காங்கிரஸ் வெற்றியில் பாதி கூட கிடைக்கவில்லை. அமைச்சர்கள் பலரும் தோல்வி முகம் அமைந்திருக்கிறது. இதனிடையே கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பணியாற்றினார். வேட்பாளர் தேர்வு முதல் பிரச்சாரம் வரை தீவிர பணிகளையும் அண்ணாமலை மேற்கொண்டார். அப்படியிருந்தும் பாஜக கர்நாடகாவில் தோல்வி முகத்தை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதியில் 86 தொகுதிகள் மட்டுமே அண்ணாமலை பொறுப்பில் விடப்பட்டது. பாஜக வென்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 65. அதில் அண்ணாமலையின் பொறுப்பில் இருந்த 39 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழலில், ’அண்ணாமலை மட்டும் இல்லையென்றால் கர்நாடகாவில் பாஜக டெப்பாசிட் இழந்திருக்கும்’ என டிவிட்டரில் நெட்டிசன்கள் வசைப்பாடி வருகின்றன.